எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிக்கான தேர்வுதேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை,
டிச.1: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம்
தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுக்கான
விண்ணப்பங்களை வரும் திங்கள்கிழமை (டிச.4) முதல் பதிவிறக்கம்
செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நிகழ்கல்வியாண்டுக்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்
புதவித் திட்டத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) தமிழக அரசின் அங்கீகா
ரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி
சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான வெற்றி விண்ணப்பங்களை டிச.4-ஆம் தேதி
முதல் டிச.19-ஆம் தேதி வரை தேர்வுத் துறையின் இணையதளம்
(www.dge.tn.gov.in) மூலமாக பள்ளிகள், மாணவர்கள் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்
இணையவழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து மாண
வர்கள் தாம்
பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் டிச.19-ஆம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட
மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவ
தும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு
9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்
தொகை வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment