தமிழகத்தில் மழை பாதிப்பு காரணமாக
மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும்மாண
வர்களுக்கு வியாழக்கிழமை (டிச.7) முதல் நடைபெறவி
ருந்த அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்க பள்ளிக் கல்வித்
துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்
கான அரையாண்டுத் தேர்வு நிகழ் கல்வியாண்டு முதல்
மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்
தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தேர்வு கால
அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம்
வெளியிட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு டிசம்பர் 7
முதல் 22-ஆம் தேதி வரையும், 6 முதல் 10-ஆம் வகுப்புக்கு
டிசம்பர் 11 முதல் 21-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடத்
தப்பட உள்ளன. இந்நிலையில், மிக்ஜம் புயல் "தாக்கம் காரணமாக
சென்னை உள்பட சில மாவட்டங்களில் தொடர் பலத்த
மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை
நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்
கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட நான்கு
மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக பள்ளி, கல்லூ
ரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்
வும் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்
ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர்
கூறுகையில், தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம்
மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளின் வளாகங்க
ளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மாணவர்களும் தேர்வுக்குத் தயாராக ஏதுவாக அரை
யாண்டுத் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை செய்து வரு
கிறோம். தமிழக அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் அறி
விப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.
மழை பாதிப்பு அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்க ஆலோசனை?
No comments:
Post a Comment