வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்பு
மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க யு.ஜி.சி. அறிவுறுத்தல்
பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் செய்து, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்படாத பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக மானியக்குழுவுக்கு தெரிய வருகிறது.
அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், செய்தித்தாள்களிலும் சில கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் முறையில் பட்டம், டிப்ளமோ படிப்புகளை வழங்குவதாக விளம்பரம் செய்து வருவதும் பல்கலைக்கழக மானியக்குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவ்வாறு வழங்கப்படும் பட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அதுபோன்ற கல்வி நிறுவனங்களின் பட்டங்கள், திட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் அனுமதிக்கப்படாது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள், விதிமுறைகளை தவறிய உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மாணவர்கள், பெற்றோர் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற படிப்புகள், பட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் இருக்கிறதா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment