2024-25, 2025-26 ஆகிய 2 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வரைவுத் திட்டம் தயார் செய்து சமர்ப்பிக்க ஏதுவாக புதிய அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய இடங்கள் எவை?, ஏற்கனவே உள்ள தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் எவை? என்ற விவரங்களை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அவ்வாறு விவரங்களை அனுப்பும்போது மேலும் சில தகவல்களையும் இணைத்து அனுப்ப தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய தொடக்கப்பள்ளி தொடங்குவதற்கான இடம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் அசல் சான்று, அந்த இடம் பள்ளிக்கல்வித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆதாரம், ஆவணங்கள், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு கட்டிட வசதி, கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதி பற்றிய விவரங்கள், புதிய தொடக்கப்பள்ளி தொடங்கும் பட்சத்தில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருக்குமா? என்பது போன்ற விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment