ரெயில்வே ஊழியர்கள் செல்போன் செயலியில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, December 6, 2023

ரெயில்வே ஊழியர்கள் செல்போன் செயலியில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்!

ரெயில்வே வாரியம் எச்.ஆர்.எம்.எஸ். (மனித வள மேலாண்மை அமைப்பு) என்ற இணைய பக்கத்தில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதே பெயரில் செல்போன் செயலி சேவையையும் அது வழங்கி வருகிறது. அதில் தற்போது, விடுப்பு தொகுதியில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ரெயில்வே ஊழியர்களுக்கான விடுப்பு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியுள்ளது. “சில வகையான விடுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தற்போது ஆண்ட்ராய்டு பதிப்பில் மட்டுமே இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் ஐ.ஓ.எஸ். தளத்தில் செயல்பட வைக்கும் ஏற்பாடுகளும் நடக்கிறது” என்று ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment