‘ஸ்மார்ட்’ ஆப்ஸ், ‘ஸ்மார்ட்’ குழந்தைகள்..! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 8, 2023

‘ஸ்மார்ட்’ ஆப்ஸ், ‘ஸ்மார்ட்’ குழந்தைகள்..!

குழந்தைகள் பொழுதுபோக்கவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஏற்ற ஸ்மார்ட்டான அப்ளிகேஷன்களை, இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம். இவை உங்களது குழந்தைகளை, ஸ்மார்ட்டான குழந்தைகளாக வளர்த்தெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
1. ஸ்கெட்ச் ஏ.ஆர். (SketchAR) உங்களுக்குப் பிடித்த படத்தை போனில் போட்டோ எடுத்து அதனை இந்த ஆப்பில் கொண்டு வந்தால் போதும். போனில் தெரியும் படத்தை அப்படியே ட்ரேஸ் (நகல்) எடுத்து வெள்ளைத்தாளில் வரையவேண்டியதுதான். 

  2. பாக்கெட் கோட் (Pocket Code) பிதாகரஸ் தேற்றத்தை விஷுவலாக நீங்களே புரோகிராம் எழுதி உருவாக்க இந்த ஆப் உதவும். விளையாட, பாடல் கேட்க என பல்வேறு விஷயங்களை கோடிங்கை கற்றுக்கொண்டே செய்து பழகலாம். 
3. திங்க்ரோல்ஸ்: கிங்-குயின் (Thinkrolls: Kings-Queens) ஐந்து வயதைக் கடந்த குழந்தைகளுக்கான 228 புதிர் விளையாட்டுகளைக் கொண்டு அவர்களின் மூளையை பட்டை தீட்டும் ஆப் இது. 

4. காஸ்மோலேண்டர் மிஷன் (Cosmolander Missions in the Solar System) ஆறு வயது சுட்டிகளுக்கு சூரிய மண்டலம், கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளை உள்ளிட்ட தியரிகளை எளிமையாகப் புரியவைக்கிறது இந்த ஆப். 

5. ஆல் இன் ஒன் கால்குலேட்டர் (All-in-One Calculator) அனைத்து வகை கணக்குகளையும் எளிதாகத் தீர்க்கும் 50 வகை கால்குலேட்டர்களைக் கொண்டுள்ள ஆப் இது.

No comments:

Post a Comment