JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் | வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, December 7, 2023

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் | வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் -- சார்ந்து 

செயல்முறைகள் 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்த மாணவர்களில் விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாட்களின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, JEE விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய தகவல்களைக் கூறி கலந்துக் கொள்ள வலியுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சிக்கான 

வழிகாட்டு நெறிமுறைகள்: 

1 இணைப்பில் குறிப்பிட்டுள்ள கால அட்டவணைப்படி, JEE - க்கான இணையவழி பயிற்சி வகுப்பு மாநில இயக்குநரகத்திலிருந்து வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பள்ளிகளில் உள்ள Hi-tech lab வாயிலாக மாணவர்கள் பெற்றிட தகுந்த ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். இப்பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் மாநில இயக்குனரகத்திலிருந்து அனுப்பப்படவிருக்கும் மற்றொரு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படும். [

2. JEE தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும் நாட்களில் ஒரு ஆசிரியர் வீதம், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருதல் வேண்டும். அவ்வாறு, பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் பணி செய்ததை ஈடு செய்வதற்கான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் (Compensatory Leave 

3. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் தொடரும் வகுப்புகளை பள்ளி முடிந்து மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக பள்ளியிலேயே மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் மற்றும் தகுந்த வழிகாட்டல்களை சுற்றறிக்கை வாயிலாக வழங்கிடல் வேண்டும். Download Proceedings




 

No comments:

Post a Comment