JEE MAIN தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 2, 2023

JEE MAIN தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் உயர்கல்வித்துறை நிறுவனங்களான ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ.தேர்வானது மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், ஜே.இ.இ.மெயின் தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும். 


 அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ.மெயின் தேர்வு வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையில், ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதை ஏற்றுக்கொண்ட தேர்வு முகமை, ஜே.இ.இ.தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 4-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தேசிய தேர்வுகள் முகமை அவகாசம் வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment