இன்றைய 10 சொற்கள்! (தமிழ் & ஆங்கிலம்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 6, 2024

இன்றைய 10 சொற்கள்! (தமிழ் & ஆங்கிலம்)

 இன்றைய 10 சொற்கள்!


1. Axe (ஆக்ஸ்) - கோடாரி. 

 முற்காலத்தில் போர்க்களங்களில் கோடாரி ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. In the past, axe was used as an important weapon in the battlefield.

 2. Sickle (சிக்கில்) - அரிவாள். 

 கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கு தீவனம் வெட்ட அரிவாள் பயன்படுத்தப்படுகின்றன. Sickle are used for cutting forage for feeding livestock. 

 3. Sieve (சீவ்) - சல்லடை. 

 ஒரு பொருளில் இருந்து தேவையானதை பிரித்தெடுக்க சல்லடை பயன்படுத்தப்படுகிறது. Sieve is used to separate necessary material from a material. 

 4. Crowbar (க்ரோபார்) - கடப்பாரை. 

 ராமு கடப்பாரையைப் பயன்படுத்தி குழியைத் தோண்டினார். Ramu dug a hole by using crowbar. 

 5. Hammer (ஹேமர்) - சுத்தி. 

 ராஜு சுத்தியைக் கொண்டு கான்கிரீட் தடுப்பை உடைத்தார். Raju broke up the concrete block with a hammer. 

 6. Tractor (டிராக்டர்) - உழவு இயந்திரம். 

 உழவு இயந்திரம் என்பது வயலை உழுவதற்குப் பயன்படும் இயந்திரமாகும். Tractor is a machine used for ploughing the land. 

 7. Plough (ப்ளொவ்) - கலப்பை. 

 பல நூற்றாண்டுகளாக, விவசாயிகள் கலப்பையைப் பயன்படுத்தி வருகின்றனர். For centuries, farmers are using the plough. 

 8. Spade (ஸ்பேடு) - மண்வெட்டி. 

 மண்வெட்டி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Spade are still widely used in countries such as India, Sri Lanka. 

 9. Seed drill (ஸீடு ட்ரில்) - விதைக்கலப்பை. 

 விதைக்கலப்பை என்பது விதைகளைச் சீராக விதைக்க பயன்படும் ஓர் இயந்திரமாகும். Seed drill is a machine used to sow the seeds uniformly.

 10. Threshing machine (த்ரெஷிங் மெசின்) - கதிரடி இயந்திரம். 

 கதிரடி இயந்திரம் பெரும்பாலும் டீசல் எண்ணெயில் இயங்குபவை. Threshing machine is mostly operated by diesel oil.

No comments:

Post a Comment