அரசு பள்ளி வளாகங்களில் 3 நாட்களுக்கு தூய்மைப்பணி பள்ளிக்கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 5, 2024

அரசு பள்ளி வளாகங்களில் 3 நாட்களுக்கு தூய்மைப்பணி பள்ளிக்கல்வித்துறை தகவல்

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துதல், காய்கறி தோட்டம் பள்ளிகள் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக வருகிற 8-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பள்ளி தூய்மைப் பணியை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. 

அந்த வகையில், அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகையை பயன்படுத்தும் வண்ணம் உறுதி செய்வது உள்பட பள்ளி வளாகங்களில் அனைத்து விதமான தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான நிதியை பள்ளி மற்றும் பராமரிப்பு மானியத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தலாம் என்றும், தனியார் தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி பங்களிப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment