புதுமையான எம்.பி.ஏ. பட்டமேற்படிப்புகள்..! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 20, 2024

புதுமையான எம்.பி.ஏ. பட்டமேற்படிப்புகள்..!

வெளிநாடுகளில் பணியாற்ற வேண்டும் என்று சிறு வயதில் கண்ட கனவை, நனவாக்க விரும்புபவர்களுக்கு எம்.பி.ஏ. பட்டமேற்படிப்பில் உள்ள பி.எப்.டி., எம்.ஐ.பி. ஆகியன சிறந்த தேர்வாக உள்ளது. உலகம் முழுவதும் பொருட்களின் இடப்பெயர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. 


உபரியாக உற்பத்தியாகும் நாடுகள் பற்றாக்குறையாக உள்ள நாடு களுக்கு தங்களது பொருட்களை விற்பனை செய்து அன்னியச் செலாவணியை ஈட்டி வருகின்றன. இதற்காக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளன. மாஸ்டர் ஆப் பாரின் டிரேட் (எம்.எப்.டி.), மாஸ்டர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ் (எம்.ஐ.பி.) ஆகிய படிப்புகளை படித்து முடித்தவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் எளிதில் பணிக்கு செல்ல முடியும். மேலும், சொந்தமாகவும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் உருவாக்கி அதன்மூலம் வருவாய் ஈட்ட முடியும். 

நமக்கான தொழில் ஆர்வத்துக்கு ஏற்ற வகையில் படிப்புகளை தேர்வு செய்து படிப்பதால் மட்டுமே தனித் திறனை வெளிக்காட்டி வாழ்வில் உயர முடியும். விமான நிலையங்களில் பணியில் அமர விரும்புபவர்களுக்கு என எம்.பி.ஏ. ஏர்போர்ட் அண்டு ஏவியேஷன் மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு உறுதுணையாக இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள் எம்.பி.ஏ. இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு சிஸ்டம் மேனேஜ்மென்ட் படிப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சகலத் துறைகளிலும் உயர்ந்த பதவியில் அமர்ந்து பணியாற்றலாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை பெற எம்.பி.ஏ. இன் கார்ப்பரேட் கவர்னன்ஸ் மேற்படிப்பை படிக்கலாம். 

இது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள படிப்பு. தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நல்சார் (NALSAR) யுனிவர்சிட்டியில் இப்படிப்பை வழங்குகின்றனர். பொறியியல் படித்து முடித்தவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்ற விரும்பினால் அதற்கான படிப்பாக எம்.பி.ஏ. இன்சூரன்ஸ் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட் படிக்கலாம். தனியார், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இந்த படிப்பை முடித்தவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இன்றைய உலகில் விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சாதாரணமாக சிறு கடையை ஆரம்பிப்பது முதல் சினிமா படங்கள் தயாரித்து வெளியிடுவது வரையில் விளம்பரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர். 

எம்.பி.ஏ. இன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பதன் மூலம் விளம்பர நிகழ்ச்சி முதல் பல்வேறு நிகழ்ச்சி, கண்காட்சிகள் நடத்தும் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெறலாம். சுற்றுலாத் துறைக்கான முக்கியத் துவம் நாளுக்குநாள் பெருகி வருகிறது. பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. டிராவல் அண்டு டூரிஸம் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவு வழங்குகின்றனர். 

இப்படிப்பு பயில விரும்புபவர்களுக்கு பிற மொழிகள் தெரிந்து இருந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படித்து முடித்ததும் உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கும். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டிரியல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. மெட்டிரியல் மேனேஜ்மென்ட் படிக்கலாம். புனே யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. இன் பயோ டெக்னாலஜி உள்ளிட்டவையும் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளக்கூடிய படிப்பாக உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு திட்ட அறிக்கை தயாரித்துக் கொடுக்கக்கூடிய திறன்மிக்க படிப்பாக எம்.பி.ஏ. இன் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளது. நிறுவனங்களில் தொழிலாளர்களை கையாளும் விதமான படிப்பாக எம்.பி.ஏ. லேபர் மேனேஜ்மென்ட் உள்ளது.

No comments:

Post a Comment