31.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 23, 2024

31.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், ந.க.எண்.075158/டபிள்யு1/இ1/2023 நாள் 23.01.2024 
பொருள் : 

பள்ளிக் கல்வித் துறை - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - 31-12-2021 அன்று பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு பணிவரன்முறை   கருத்துருக்கள் அனுப்பிட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து. 


பார்வை: சென்னை-6. நடைபெற்றுள்ளது. 1. சென்னை-06, பள்ளிக் கல்வி ஆணையாக இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.3720/டபிள்யு1/இ1/2019 நாள் 28.12.2021 2. சென்னை உயர்நீதிமன்ற வழக்கு டபிள்யு.பி.7091/2020 நாள்.24.09.2021 

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணியில் 01.01.2019 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு சுழற்சிப் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 11.11.2019 இல் கலந்தாய்வு கலந்தாய்விற்குபின் கூடுதல் முன்னுரிமைப் பட்டியலின் படியும் பார்வை 2இல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.No.7091/2020 நாள்.24.09.2021 நாளிட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் பார்வை-1 இன்படி கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டு 31.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. + 

31.12.2021 இல் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணிவரன்முறை கருத்துரு முழுமையாகவும், ஒட்டுமொத்தமாகவும் (Consolidated Proposal) தயார்செய்து முதன்மைக் கல்வி அலுவலரால் அனுப்பப்படல் வேண்டும். இக்கருத்துருவில் எவரது பெயரும் விடுபடவில்லை என்பதற்கும் முழுமையாக உள்ளது என்பதற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சான்று அளிக்க வேண்டும். . : இக்கருத்துருவில் 31.12.2021 இல் பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பெயர் ஏதேனும் விடுபட்டால் அதற்கான முழு பொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க வேண்டும். 

* எக்காரணம் கொண்டும் தலைமை மேல்நிலைப் பள்ளி பணிவரன்முறை கருத்துரு தனித்தனியாக அனுப்ப கூடாது. ஆசிரியர்களின் Excel * மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள படிவத்தில் மருதம் Font இல் முழுமையாக பூர்த்தி செய்து 24.01.2024 மாலை 4.00 மணிக்குள் இவ்வியக்கக W1 பிரிவு மின்னஞ்சல் Widsetn@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு. முதன்மைக் கல்வி அலுவலரால் கையொப்பமிடப்பட்ட பிரதியினை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பெயரிட்ட உறையில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 
இணைப்பு : படிவம் பள்ளிக் கல்வி இணை 7 இழக்குநர் (மேல்நிலைக் கல்வி) 29/129 பெறுநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்




No comments:

Post a Comment