முக்கியமான சமையல் டிப்ஸ் / Important Cooking Tips - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 20, 2024

முக்கியமான சமையல் டிப்ஸ் / Important Cooking Tips

8 முக்கியமான சமையல் டிப்ஸ் 


 1. வெண் பொங்கல் செய்து பக்குவம் ஆனதும் குக்கரைத் திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். 

 2. பொங்கலுக்கு சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாவும் இருக்கும். 

 3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது பாதி அளவு சர்க்கரை, பாதி அளவு வெல்லம் சேர்த்து அதனுடன் சர்க்கரைப் பாகில் ஊற வைத்த அன்னாசிப் பழத்துண்டுகளைச் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 4. சர்க்கரைப் பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் போதும். 

 5. வெல்லப் பொங்கல் செய்யும் போது ஒரு டம்ளர் கரும்புச்சாறும், இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தையும் மசித்துச் சேர்த்துக் கொண்டால் வெல்லப் பொங்கல் சுவையே அலாதி தான். 

 6. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது நன்கு கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துப்போட்டுச் செய்தால் பொங்கல் அமிர்தமாக இருக்கும். 

 7. சர்க்கரைப் பொங்கலுக்கு கொப்பரைத் தேங்காயைத் துருவியும், திராட்சை, முந்திரியை அரைத்துப்போட்டும் ஏலக்காய்த் தூள் கலந்தும் செய்தால் சர்க்கரைப் பொங்கல் வாசனை அதிகமாக இருக்கும். 

 8. வெண்பொங்கல் செய்யும்போது பயத்தம் பருப்போடு தண்ணீருக்கு பதில் ஒரு கப் பால் விடலாம். வெண் பொங்கல் சுவையாக இருக்கும். 

 -ஆர். கீதா, கொச்சி, கேரளா.

8 Important Cooking Tips

  1. When the white Pongal is cooked, open the cooker and stir in a spoonful of boiled milk and cover the Pongal will be very tasty.

  2. For Pongal, if you rub a little cumin with your hands, it will be tasty and fragrant.

  3. While making Sugar Pongal, adding half sugar and half jaggery and pineapple pieces soaked in sugar syrup will be very tasty.

  4. Just add a little milkmaid to make the Sugar Pongal taste even more amazing.

  5. When making Vellam Pongal, if you mash a dash of sugarcane juice and two yellow bananas, the Vellam Pongal will taste amazing.

  6. When making Sugar Pongal, if you grind the well-ripened papayas in milk, the Pongal will be sweet.

  7. For Sugar Pongal, the sugar Pongal smell will be more if you mix coconut with grated coconut and ground raisins and cardamom powder.

  8. You can add a cup of milk instead of water while making venpongal. White pongal is delicious.

  -R. Geetha, Kochi, Kerala.

No comments:

Post a Comment