விரும்பும் வேலையை ‘ஸ்கெட்ச்’ போட்டு பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அது சிரமமுமல்ல. சில ‘பார்முலா’க்களை சரியாக பயிற்சி செய்தால் போதும். விரும்பிய வேலையை வாங்கிவிடலாம்.
கேள்விகளுக்கு தயாராகுங்கள்
உங்களைப்பற்றிக் கூறுங்கள், உங்கள் பிளஸ்-மைனஸ் என்ன, முன்பிருந்த நிறுவனத்திலிருந்து ஏன் விலகினீர்கள், எங்களது நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கான பதிலைச்சொல்ல நடுங்காமல், அதற்கு முன்கூட்டியே தயாராவது அவசியம். எளிமையான கேள்விகள் எனினும், நிறுவனத்தைப் பற்றிய தகவல்களோடு பதில்களை உண்மையாக முன்வைத்தால் ஜெயிக்கப்போவது நீங்கள்தான்.
இன்டர்வியூ செய்யுங்கள்
பொய்யல்ல. உண்மைதான். உங்களிடம் நேர்காணல் செய்பவர், கேள்விகளை கேட்டு முடித்ததும் வேலை தொடர்பான சந்தேகங்கள் உள்ளதா? என கேட்பார். அப்போது வேலை குறித்த உங்களது சந்தேகங்களை, அலுவலகத்தின் வசதிகளை, அத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை நீங்கள் கேட்டு தெளிவு பெறலாம்.
உடை முக்கியம்
நாம் வேலைக்கு பொருத்தமானவர் என ஒருவர் நம்புவதற்கு சிறப்பான உடைகள் அவசியம். எனவே, ஸ்டைல்பார்ட்டியாக நீங்கள் இல்லாவிட்டாலும், நல்ல பார்மல் உடையில் கச்சிதமான அழகில் நேர்காணல் அறைக்கு புன்னகையோடு போனால் அட்டகாச ஆரம்பம்.
நேர்காணல் ஒத்திகை
நடிப்புக்குத்தான் ஒத்திகை தேவையா என்ன?, இண்டர்வியூவுக்கும் தேவைதான். முன்பே ஒத்திகை பார்த்தால் மனதளவில் நம்பிக்கையோடு இருப்போம் என்பதோடு கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடிவது இதன் பிளஸ் பாய்ண்டும் கூட.
தகுதியானவர் என நிரூபியுங்கள்
உங்கள் தகுதிகளை சரியான விலைக்கு விற்பதுதான் நேர் காணல். எனவே நிறுவனத்துக்கு உங்களால் ஒரு பைசாவேனும் பிரயோஜனம் உண்டா என்பதை நேர்காணல் செய்பவருக்கு விளக்க வேண்டும். நறுக் கென சிம்பிளாக ஆனால் வலுவாக இருப்பது சிறப்பு.
---------------------------இதையும் படியுங்கள்----------------------------
👉எண்ணும் எழுத்தும் பருவம் மூன்று வகுப்பு 4 மற்றும் 5 அலகு 2 ஜனவரி 3, 4 வாரம் தமிழ் வழி பாடக்குறிப்பு
👉எண்ணும் எழுத்தும் பருவம் மூன்று வகுப்பு 4 மற்றும் 5 அலகு 2 ஜனவரி 3, 4 வாரம் ஆங்கில வழி பாடக்குறிப்பு
No comments:
Post a Comment