தமிழ்நாடு அரசு
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், சென்னை
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில்
TNPSC மற்றும் SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்
TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள்
பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை சர்
தியாகராயா கல்லூரி வளாகத்தில் உள்ள 500 இடங்களுக்கும் மற்றும் சென்னை,
|சேப்பாக்கம் மாநிலக்கல்லூரி வளாகத்தில் உள்ள 300 இடங்களுக்கும் பிற்பகல் 2 மணி முதல்
|5 மணி வரை ஆறு மாத காலம் நடைபெற உள்ளது. மேற்படி பயிற்சிக்கு குறைந்த பட்சம் 10 ஆம்
|வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தமிழக அரசால்
பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறும்.
அ. இணையதளவழி விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் 29.01.2024 (திங்கட்கிழமை)
இணையதளவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான 12.02.2024 (திங்கட்கிழமை)
கடைசி நாள்
கூடுதல் விவரங்களை www.cecc.in என்ற இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ள
அறிவிக்கை மூலம் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment