தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள். சென்னை-6.
ந.க.எண்.002405/என்2/இ2/2024,
நாள்.10.01.2024
பொருள்- பள்ளிக் கல்வி - இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் -
கட்டடங்கள் நிலையினை இணைய வழி பதிவு செய்தல்
- அறிவுரைகள் வழங்குதல் - சார்பு
***
அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில்
ஒருங்கிணைந்த கல்வி பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின்
அடிப்படையில் பள்ளிகளில் பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள்,
கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு TNSED Administration
App-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக பழுதடைந்த
கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், இப்பணியின் தற்போதைய நிலையினை
அறிந்துகொள்ளவும், அதனடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும்
ஏதுவாக மேற்கண்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இடிக்கப்ட
வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையினை பின்வரும் வழிமுறையினைப்
பின்பற்றி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களை செயலியில்
பதிவேற்றம் செய்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. TNSED Administration App-ஐ Google Play Store-இல் தரவிறக்கம் செய்து
கொள்ளவும்.
2. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது பயனர் குறியீடு (User ID),
கடவுச்சொல் (Password) பயன்படுத்தி உள்நுழையவும்.
3. Civil Inspection என்ற உருவத்தினை (Icon) சொடுக்கவும்.
4. கள ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடிக்கப்பட வேண்டிய
கட்டிடங்களின் விவரங்கள் திரையில் தோன்றும்.
5. இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தின் பெயரினை சொடுக்கவும்.
கட்டிடம் இடிக்கப்பட்டதா, இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதா உள்ளிட்ட விவரங்கள்
இடம் பெற்றிருக்கும். உரியனவற்றை தெரிவு செய்து அதற்குரிய புகைப்படத்தினை
பதிவேற்றம் செய்திட வேண்டும். கூடுதலாக வேறு ஏதேனும் கட்டிடங்கள்
இடிக்கப்பட வேண்டுமெனில் அது குறித்த விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள்
தங்களது EMIS Login ID-ஐ பயன்படுத்தி, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில்
இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் தொடர்பான விவரங்களை தரவிறக்கம் செய்து
தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இடித்து
அகற்றப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
அவைணி
பள்ளிக்கல்வி இயக்குநர்
பெறுநர்-
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி / இடைநிலை)
No comments:
Post a Comment