பாடத்திட்டங்களை உருவாக்க மூத்த பேராசிரியர்களுக்கு பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, January 28, 2024

பாடத்திட்டங்களை உருவாக்க மூத்த பேராசிரியர்களுக்கு பயிற்சி

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

தேசிய கல்விக் கொள்கை-2020, தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளில் உயர்கல்வி வழங்குவதை ஊக்குவிக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கும், தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிக்கல்விக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு உள்ளது. 

தற்போது, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இந்திய மொழிகளுக்கான அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, உள்ளூர் மொழிகளில் பாடத்திட்டங்கள், தொகுப்புகள் உருவாக்குதல், கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்பான 2 நாள் பயிற்சி பட்டறையை வருகிற பிப்ரவரி மாதம் நடத்த உள்ளது. இந்த பயிற்சி பட்டறை, மண்டல வாரியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ளூர் மொழியில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்த 2 மூத்த பேராசிரியர்களை யு.ஜி.சி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆசிரியர்களின் விவரங்களை யு.ஜி.சி.யிடம் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment