TRB மூலம் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் - DEE செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 13, 2024

TRB மூலம் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் - DEE செயல்முறைகள்

TRB மூலம் 2003-2007 வரையிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட  நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி இணை இயக்குநரின்(நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-6 நகஎண். 00743/இ2/2024, நாள் 12.01.2024. 

பொருள்: 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-04 முதல் 2006-07 வரை தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களின் தெரிவுப்பட்டியல் மற்றும் 2014 ஆம் ஆண்டு பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தெரிவர் பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெறப்பட்டது - அனுப்புதல் சார்ந்து. 

பார்வை: ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் ந.க. எண் 0061/(அ)E1S2/2023 நாள் 09.01.2024 

தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004, 20042005, 2005-2006, 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள் (Selection list), பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் (Merit) அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட List மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் மேற்படி விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாரும், விவரங்களை சரிபார்த்து அவ்வாசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரை வழங்குமாறு அனைத்து கல்வி) மாவட்டக் தெரிவிக்கலாகிறது, 

நகல் பெறுநர் கல்வி இணைப்பு: 2003-2004, 2004-2005, 2005-2006, 2006-2007, 2014 தற்காலிகத் தெரிவுப் பட்டியல் பட்டியல் அலுவலர்களுக்கும் (தொடக்கக் /ஒம்/ தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(நிர்வாகம்) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி) அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
Read this also








































No comments:

Post a Comment