காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 20, 2024

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

💥TEACHERS WANTED - Salary negotiable for experienced candidates - CLICK HERE

💥WANTED ASSISTANT PROFESSORS FOR ARTS AND SCIENCE COLLEGE  - CLICK HERE

💥WANTED LECTURERS | INSTRUCTORS | PHYSICAL DIRECTOR | DRIVER FOR POLYTECHNIC COLLEGE  - CLICK HERE

💥மாபெறும் வேலைவாய்ப்பு (நேர்காணல்) கல்வித் தகுதி  DIPLOMA / DEGREE / B.E.  - CLICK HERE

💥பிப்ரவரி 23ஆம் தேதி MRF LIMITED வேலைவாய்ப்பு முகாம்  - CLICK HERE

💥பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 22-02-2024  - CLICK HERE
--------------------
உதவி பொறியாளர் முதல் சிவில் நீதிபதி வரை; காலிப் பணியிடங்களை நிரப்ப 1253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகின்றது. அந்த வகையில், கடந்த 15 நாட்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டு, நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment