பிளஸ்-2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு அகப்பயிற்சிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை Plus-2 for vocational students Incentive of Rs.1,000 for internal training - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 10, 2024

பிளஸ்-2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு அகப்பயிற்சிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை Plus-2 for vocational students Incentive of Rs.1,000 for internal training

பிளஸ்-2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு அகப்பயிற்சிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை Plus-2 for vocational students Incentive of Rs.1,000 for internal training
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.1,000 ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ்-2 மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெறவேண்டும். மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் ஆகியவற்றை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விவரங்களை, வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகு நிதி விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment