குரூப்-2 நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2, குரூப்-2 ஏ பதவிகளில் வரும் 6 ஆயிரத்து 151 பணியிடங்களுக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வை நடத்தியதோடு, அதற்கான தேர்வு முடிவையும் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. இதில் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 பதவிகளுக்கு முதலில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதன் பிறகு குரூப்-2ஏ பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில், அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்கள் யார்? என்பது குறித்த பட்டியலை சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
அதன்படி, கடந்த 12-ந்தேதி முதல் நேற்று வரை நேர்முகத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தி முடித்தது. இதில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டவர்களில் 324 பேரின் நேர்முகத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் விவரங்களுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்டமாக கலந்தாய்வு மூலம் பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment