⭕10 வகுப்பு அறிவியல் செய்முறை தேர்விற்கான பல்வேறுபட்ட விடைக்குறிப்புகள் - Click here
ஜூன் 23-ந்தேதி இடைநிலை ஆசிரியர் பணி போட்டித் தேர்வு June 23-Teacher Recruitment Board Notification for Second grade Teacher Job Competitive Exam
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு, வருகிற ஜூன் 23-ந்தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு வருகிற ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெறும். இதற்கு, டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வருகிற 14-ந்தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு கொள்குறி வகை (ஒ.எம்.ஆர்.) விடைத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் இரு பிரிவுகளாக இருக்கும்.
ஜூன் 23-ந்தேதி இடைநிலை ஆசிரியர் பணி போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு June 23-Teacher Recruitment Board Notification for Second grade Teacher Job Competitive Exam
முதல் பிரிவு கட்டாய தமிழ் தகுதித் தேர்வாக இருக்கும். இதில், 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு இடம் பெறும். அதில், குறைந்தபட்சம் 20 மதிப்பெண் எடுக்க வேண்டும். பொதுப் பிரிவு வினாத்தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும். இதில், பொதுப் பிரிவினர் 60 மதிப்பெண்ணும், இதர பிரிவினர் 45 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். இதற்கிடையே கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பொதுப் பிரிவு விடைத்தாள் திருத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment