நகை மதிப்பீட்டாளர் தேவை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், சேலம் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் வங்கி கிளைகள் சேலம்,
நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில்
செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள சில கிளைகளில் கமிஷன் அடிப்படையில்
முழு நேர நகை மதிப்பீட்டாளராக பணியாற்ற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு மாவட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
2. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
3. விண்ணப்பதாரர்கள் கோல்ட் ஸ்மித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் விண்ணப்பத்துடன் சமூக
சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
4. கோல்ட்ஸ்மித் சமூகத்தை தவிர வேறு விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம்
இருந்து நகை மதிப்பீடு செய்வதற்கு தேவையான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும்
சான்றிதழின் நகல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
5. வங்கியின் தேவை மற்றும் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில்
உள்ள எந்த கிளையிலும் தேர்வு செய்யப்பட்ட நகைமதிப்பீட்டாளர்கள் கமிஷன் அடிப்படையில்
பணியமர்த்தப்படுவார்கள்.
6. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு
உட்பட்டு அரசிதழ் அதிகாரி கையொப்பமிட்ட புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா, ரேஷன் கார்டு.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு நகல், கல்வி சான்றிதழின் நகல், அனுபவ சான்றிதழ் (முன்
அனுபவம் இருக்கும் பட்சத்தில்) மற்றும் நேர்முகத் தேர்வுக்கு சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன்
எங்களுடைய மண்டல அலுவலகத்திற்கு ரெஜிஸ்டர் போஸ்ட் மூலம் விண்ணப்பங்களை
அனுப்பலாம்.
விண்ணப்பங்கள் ஒப்புக்கொள்ளப்படும் கடைசி தேதி : 26-02-2024
இந்த நேர்முகத் தேர்வினை மாற்றி அமைக்கவோ, ஒத்தி வைக்கவோ அல்லது
நிறுத்தி வைக்கவோ எமது வங்கிக்கு முழு அதிகாரம் உண்டு
No comments:
Post a Comment