அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகளின்படி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக இன்று (திங்கட்கிழமை) முதல் 20-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) இந்த தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாணவரும் 10 வினாக்களுக்கு இந்த அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பதில் அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உரையாடல் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.
அந்தவகையில் இந்த தேர்வுகளை 40 நிமிடங்களுக்குள் ஒவ்வொரு மாணவருக்கும் நடத்தி முடிக்க வேண்டும். ஆய்வகத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்கள் என்றால் 10 பேரையும், மேல்நிலைப்பள்ளி என்றால் 20 பேரையும் அனுமதிக்க வேண்டும். இதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட வழிகாட்டுதல்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment