🟢💫EE- STD 1-3, ENGLISH, UNIT -5, ASSESSMENT VOCABULARY
🟢⚡Ennum Ezhuthum Term 3 Class 1-3 Unit 5 Notes of Lesson February 2024 Tamil Medium (PDF)
🟢⚡Ennum Ezhuthum Term 3 Class 4 nd 5 Unit 5 Notes of Lesson February 2024 Tamil Medium (PDF)
🟢⚡Ennum Ezhuthum Term 3 Mottu/Malar Unit 5 Places around Us! Read Aloud | Important Words | Sentences TLM
கர்நாடக மாநிலம் பெலகாவி மாநகராட்சி பா.ஜனதா வசம் உள்ளது. தற்போதைய மேயர், துணை மேயரின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய மேயர், துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில் மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் சவிதா காம்ப்ளேவும், துணை மேயர் பதவிக்கு ஆனந்த் சவான் என்பவரும் போட்டியிட்டனர். காங்கிரசும் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் மேயராக சவிதா காம்ப்ளேவும், துணை மேயராக ஆனந்த் சவானும் வெற்றி வாகை சூடினர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
மேயராக தேர்வாகி உள்ள சவிதா காம்ப்ளே் பெலகாவி மாநகராட்சியில் முன்பு தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ஆவார். தற்போது அவர் ஊதுபத்தி உற்பத்தி ஆலை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வானார். தற்போது அவர் மேயராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment