மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் பதிவு கல்வித்துறை சார்பில் ஏற்பாடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, February 23, 2024

மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் பதிவு கல்வித்துறை சார்பில் ஏற்பாடு

Read this also 👉ஆசிரியர் வீட்டுக்கும், பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம்? பள்ளிக்கல்வித் துறை விவரங்களை சேகரிக்கிறது - Click here

பள்ளி வளாகத்திலேயே ஆதார் பதிவு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பு தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்) மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் அதற்கான சேர்க்கை மையத்துக்கு செல்வதற்குரிய அவசியம் தவிர்க்கப்படும். இதற்கான திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 23-ந்தேதி (இன்று) தொடங்கி வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இதனை தொடங்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உதவிகளை பள்ளி மாணவர்கள் பெற முடியும். எக்காரணத்தை கொண்டு ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்துக்காக மாணவ-மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment