பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வுத்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, February 9, 2024

பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வுத்துறை தகவல்

இதையும் படிக்கவும்

👉பொதுத் தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு - CLICK HERE
                                                        -------------------------------------------
👉பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வுத்துறை தகவல் - CLICK HERE
                                                      ------------------------------------------
👉சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது - CLICK HERE                              
                                                   -------------------------------------------
👉மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக தமிழ் அ வரிசை முதல் ஒள வரிசை வரை சொற்கள் - CLICK HERE
-------------------------------------------
👉பவானிசாகர் - நேரடி மற்றும் கருணை அடிப்படையில் பணிநியமனம் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் - பணிவரன்முறைக்கு காத்திராமல் அடிப்படைப் பயிற்சி வழங்குதல் - துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் - தொடர்பாக - CLICK HERE
-------------------------------------------
👉2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High-Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு - CLICK HERE
-------------------------------------------
👉பவானிசாகர் பயிற்சி சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - CLICK HERE
-------------------------------------------
👉பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09-02-2024 - CLICK HERE
                                                      ------------------------------------------- 
👉இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.71 - CLICK HERE
-------------------------------------------
பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 


வினாத்தாள் கசிவு 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 4-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்த மாதம் 26-ந்தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிக்கப்பட உள்ளன. தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு பணிகள் தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உறுதி செய்யவேண்டும் மேலும், தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர கடந்த ஆண்டு (2023) பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக பணியாற்றாத 1,000 ஆசிரியர்களை அடையாளம் கண்டு அரசு தேர்வுத்துறை அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்து இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும், அவர்களை இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment