குழந்தைகளுக்கு எப்போது ஜூஸ் கொடுக்கலாம்? At what age can kids start drinking juice? - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 10, 2024

குழந்தைகளுக்கு எப்போது ஜூஸ் கொடுக்கலாம்? At what age can kids start drinking juice?

குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். 
பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள். எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். 

பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற்றாக எப்போதும் ஜூஸ் மட்டுமே கொடுக்கக்கூடாது. 

அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல. சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுப்பதும் தவறான பழக்கம். குழந்தைகள் ஜூஸ் பருகுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா? காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுப்பதுதான் சரியானது. குறிப்பாக காலை 11 மணி, பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் கொடுக்கலாம். 

தினமும் ஒரே வகையான பழ ஜூஸ்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சில வகை பழங்களை குழந்தைகள் சாப்பிட விரும்பாது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். 

இரவில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அதிலும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஜூஸ் ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே ஜூஸ் கொடுக்க தொடங்கலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களாக சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

Children must be given fruits that ripen during specific seasons. However, many kids show reluctance to consume fruits.

Some parents prepare juices by blending various fruits, thinking it's a suitable alternative to eating them. 

Children also prefer juice over fruits, but they shouldn't be given juice alone as a substitute for fruits.

Furthermore, giving juice on an empty stomach or immediately after a meal is not advisable. What is the correct time for children to consume juice? It's best to give juice during the intervals between meals, such as in the morning and afternoon. For example, juice can be given at 11 am and 3 pm.

It's important to offer only one type of fruit juice per day. Some children may not like certain types of fruits. It's essential to mix those fruits with ones they enjoy and prepare juice.

Giving juice before bedtime should be avoided, except for certain individuals. Specifically, citrus fruits like lemon, tamarind, and orange juice should be avoided at night. Additionally, children with sensitive stomachs or respiratory issues should not be given juice. Also, the juice should not be too cold. 

You can start giving juice to children at 10 months old. As they grow older, reduce the frequency of giving juice and encourage them to eat fruits instead.

No comments:

Post a Comment