அரசு தொடக்கப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, February 1, 2024

அரசு தொடக்கப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள்

கோவை மாவட்டத்தில் 625 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் வகுப்பறைகள் 

தற்போது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. இதுதவிர கோவை மாநகராட்சியில் சில பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. 625 

தொடக்கப்பள்ளிகள் 

கோவை மாவட்டத்தில் 625 தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கல்வி வீடியோக்களை திரையிடுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாடங்கள் கையாளப்படுகின்றன. இதில் இருவாரங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, மாதாந்திர ஆன்லைன் தேர்வு நடத்துவது, பாடங்களுக்கான வீடியோக்கள் திரையிடல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள தொழில்நுட்ப வசதி இல்லாததால் ஆசிரியர்கள் தங்களது சொந்த செல்போனை பயன்படுத்தி வந்தனர். இதனால் சிரமங்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

காட்சி வழி கற்பித்தல் 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, தொடக்கப்பள்ளி மாணவர்கள் காட்சி வழி கற்பித்தல் முறையால் எளிதில் கருத்துக்களை உள்வாங்கி கொள்கின்றனர். இதற்கான வீடியோ தமிழ்நாடு டீச்சர் பிளாட்பாரம் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை செல்போனில் திரையில் காட்டுவதற்கு பதிலாக ஸ்மார்ட்போர்டில் திரையிட்டால் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் காணவசதியாக இருக்கும். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment