ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 20, 2024

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! 
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு /நகராட்சி /மாநகராட்சி/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல், செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல். மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 
அடல் டிங்கரிங் ஆய்வகம்: 

மத்திய அரசின் நிதி ஆயோக் நிதி உதவி மூலம் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் பல்வேறு பள்ளிகளி ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் அறிவியல் தொழிற்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் குறிப்பாக ரோபோட். முப்பரிமான அச்சு உருவகங்கள் உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் தங்களது அறிவினைப் பயன்படுத்தி புதியன படைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

No comments:

Post a Comment