துணிகளில் ஏற்படும்
வாசனை திரவிய கறைகளை
நீக்குவது எப்படி?
வியர்வையால் ஏற்படும் தூநாற்றத்தை தவிர்ப்தற்காகவும், நறுமணம் வீசுவதற்காகவும்
டியோடரண்ட் மற்றும் வாசனை திரவியங்களை பயன்
படுத்துகிறீர்களா? இவற்றை உபயோகிக்கும்போது
துணிகளில் மஞ்சள்நிற கறைகள் ஏற்படுவதை கவனித்
திருப்பீர்கள். அதை எளிதாக நீக்குவதற்கான குறிப்பு
களை பார்க்கலாம்...
வாசனை திரவியங்களில் கலக்கப்பட்டிருக்கும் அமிலங்
களின் காரணமாகவே துணிகளில் மஞ்சள் நிற கறை
கள் ஏற்படும். முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில்
பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு துணியில் அழுத்த
மாக தேய்க்கவும்.
பின்பு துணி துவைக்க பயன்படுத்தும் திரவ
சோப்பை கறையின் மீது பூசவும். 15 முதல் 20 நிமிடங்
கள் வரை அதை அப்படியே வைக்கவும். பின்பு கறை
படிந்திருக்கும் பகுதியை கைகளால் நன்றாகக் கசக்கி
தேய்த்தால் கறை முழுவதுமாக நீங்கும்.
Read Also கண்கவரும் கண்ணாடி நகைகள்
வாழ்வியல்
வாசனை திரவியங்கள் தெளிப்பதால் துணிகளில்
ஏற்படும் கறைகளை அகற்ற பேக்கிங் சோடா சிறந்த
தீர்வாகும். துணியில் படிந்துள்ள கறையின் அளவுக்கு
ஏற்ப பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான தண்
கணிரை கலந்து பசை போல தயாரிக்கவும். இதை
கறையின் மீது நன்றாகப் பூசவும். 10 முதல் 15 நிமிடங்
கள் கழித்து டிடர்ஜென்ட் கொண்டு துணியை சுத்தப்
படுத்தவும். இப்போது கறை நீங்கி துணி பளிச்சிடும்.
சிறிதளவு அமோனியா திரவத்துடன் பேக்கிங் சோடா கலந்து பசை போல தயாரிக்கவும்.
இதை
துணியில் கறை உள்ள பகுதியில் பூசவும்.
10 நிமிடங்கள் கழித்து துணியை டிடர்ஜென்ட் கொண்டு
சுத்தப்படுத்தவும். முதலில் இந்தக் கலவையை
துணியில் சிறிதளவு மட்டும் பூசிப்பார்க்கவும். இதன்
மூலம் துணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால்.
கறையை முழுவதுமாக நீக்க பயன்படுத்தவும்.
துணியில் படிந்திருக்கும் கறை கடினமானதாக
இருந்தால், 1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் பாத்திரம்
கழுவும் சோப்பு திரவம் மற்றும் சிறிதளவு தண்ணீர்
சேர்த்து கலக்கவும். இந்தக் கரைசலை துணியில்
கறை படிந்திருக்கும் இடத்தில் தாராளமாக பூசவும்.
10 நிமிடங்கள் கழித்து டிடர்ஜென்ட் கொண்டு
துணியை சுத்தம் செய்யவும்.
பட்டுத் துணிகளில் வாசனை திரவியங்கள் மூலம்
கறை ஏற்பட்டால் அவற்றை சற்று கவனத்துடன் நீக்க
வேண்டும். வெள்ளை வினிகருடன் சமஅளவு தண்ணீர்
கலக்கவும். இதை கறையின் மையப்பகுதியில் பூசவும்.
சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு
துணியை சுத்தம் செய்யவும்.
பருத்தி, கம்பளி போன்ற நுணி ரகங்களில் படிந்
திருக்கும் வாசனை திரவியத்தின் கறையை நீக்க
தண்ணீரில் நனைத்த பஞ்சை பயன்படுத்துங்கள்.
கறையின் வெளிப்பக்கத்தில் இருந்து உள் பக்கத்தை
நோக்கி நிதானமாக பஞ்சை ஒற்றி எடுங்கள். இவ்
வாறு பலமுறை செய்யும்போது கறை சிறிது சிறிதாக
நீங்கும்.
No comments:
Post a Comment