பள்ளிக்கல்வித் துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அவருடைய அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு மாற்றி அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பினை பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment