முக்கியமான சமையல் டிப்ஸ் | Important cooking tips - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, February 12, 2024

முக்கியமான சமையல் டிப்ஸ் | Important cooking tips

சமையல் டிப்ஸ் 


  பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை. ருசியாகவும் இருக்கும். 

  உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டால் சுவையாக இருக்கும். மாவு அரைக்கும்போது சிறிது துவரம் பருப்பும் சேர்த்து அரைக்க வடை மிருதுவாக இருக்கும். 

  முருங்கைக்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்துவிடும். அதில் ஒரு பேப்பரை சுற்றி வைத்தால் காயாது. 

  பிரட் காய்ந்து போனால் இட்லி சட்டியில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்க மிருதுவாகும். 

  தோசைக்கு மாவு அரைக்கும்போது வெண்டைக்காய் கொஞ்சம் சேர்த்து அரைக்க தோசை பஞ்சு மாதிரி இருக்கும். 

  எலுமிச்சை, நார்த்தங்காயில் ஊறுகாய் செய்யும்போது அவைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் ஊறுகாயில் கசப்பு இருக்காது. 

  சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தயிர் கலக்க காரம் போய்விடும். சுவையும் கூடும். 

  கொத்தமல்லி துவையலுக்கு புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க ருசியாக இருக்கும். 

  பூண்டுவை கொஞ்ச நேரம் தண்ணீரில் போட்டால் உரிப்பதற்கு எளிதாக இருக்கும். 

  தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க சுவை கூடும். 

  டீ தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சிறிது சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும். 

  காய்கறிகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து சமைக்க நிறம் மாறாது. உப்பு சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. 

  சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க உதிரியாகி சுவையாக இருக்கும். 

  தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு சேர்க்க தோசை மிருதுவாகிவிடும். 

  இட்லி மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சேர்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து இட்லி சுட்டால் சுவையாகவும் இருக்கும். 

  இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் பிழிவது எளிதாகும். இடியாப்பமும் நல்ல பதத்துடன் வரும். 

  சுண்டலை தாளித்த பிறகு சிறிதளவு கசகசாவை வறுத்து தூவ சுவை கூடும். 

  கீரைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை பழ சாறை சிறிது விட்டால், கீரையின் நிறம் மாறாது. கீரை இலையும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும். ருசியும் அமோகமாக இருக்கும். 

  உப்பு சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் சிறிது அரிசியை துணியில் முடிச்சு போட்டு வைத்தால் உப்பு ஈரமாகாது. 

  காளான்களை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் பாத்திரம் கறுத்துவிடும்.

  உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது உப்பை சேர்க்க, விரைவில் வேகும். வெடிப்பும் வராது. 

  பஜ்ஜி மாவை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துவிட்டு பஜ்ஜி செய்தால் மிருதுவாகவும், உப்பியும் இருக்கும். 

  பிரிட்ஜில் பேக்கிங் சோடா டப்பாவை திறந்த நிலையில் வைத்தால் துர்நாற்றம் வராது. 

  பாத்திரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் சிறிது தயிர் ஊற்றி தேங்காய் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கிவிடும். - மல்லிகா, சேலம்.

No comments:

Post a Comment