Read this also 👉ஆசிரியர் வீட்டுக்கும், பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம்? பள்ளிக்கல்வித் துறை விவரங்களை சேகரிக்கிறது - Click here
ஆசிரியர்களுக்கான துணைக்கருவி ‘மணற்கேணி’ Manarkeni link available!
பள்ளிக்கல்வித் துறையால் இணையதள வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணற்கேணி செயலி ஆசிரியர்களுக்கு துணைக் கருவியாக பயன்படக்கூடிய ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட்போர்டு வாயிலாக திரையிட்டு காட்டி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த முடியும். காட்சிரீதியாக பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த மணற்கேணி இணையதளத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருட்களாக, வகுப்புகள் தாண்டி வகைப்பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் வினாடி-வினா வாயிலாக மாணவர்களின் புரிதல் திறனையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர், அதிகாரிகள்.
மேலும் போட்டித் தேர்வுகளுக்கும் இந்த செயலி உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://manarkeni.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று இந்த மணற்கேணி செயலியை பார்க்கலாம்.
No comments:
Post a Comment