எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Photo by Pixabay: https://www.pexels.com/photo/close-up-of-microscope-256262/
பொதுத்தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
மேலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 2 வகையான வினாத்தாள் வழங்கப்பட உள்ளன. இது ஏற்கனவே உள்ள நடைமுறை என்றாலும், அதனை முறையாக கண்காணித்து அதற்கேற்றபடி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வினாத்தாள்களை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
No comments:
Post a Comment