Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளம் 01.02.2024 முதல் திறப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, February 2, 2024

Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளம் 01.02.2024 முதல் திறப்பு!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் ஆதிதிராவிடர் மாணாக்கர் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சிரமமின்றி கல்வி மாறிய பயில பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும். "போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்", "ப்ரிமெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்", "மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்". "உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம்", "பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தலையாய திட்டங்களாகும். 
2023-2024 ஆம் கல்வியாண்டில், மேற்காணும் திட்டங்களின் கீழ் தோராயமாக 14 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் பயன் அடைவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

No comments:

Post a Comment