"Special Training Program by the School Education Department for Science Laboratory Assistants in Government Schools" - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 10, 2024

"Special Training Program by the School Education Department for Science Laboratory Assistants in Government Schools"

⭕10 வகுப்பு  அறிவியல்  செய்முறை தேர்விற்கான  பல்வேறுபட்ட  விடைக்குறிப்புகள் - Click here

⭕குழந்தைகளுக்கு எப்போது ஜூஸ் கொடுக்கலாம்? - Click here

⭕TEACHERS RECRUITMENT BOARD SHORT NOTICE MPORTANT DATES - Click here

⭕இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.71 - Click here

Ennnum Ezhuhum Term 3 Unit 5 Class 1-3 (TM - EM) Notes of Lesson (PDF) - Click here

Ennnum Ezhuthum Term 3 Unit 5 Class 4 and 5  (TM ) Notes of Lesson (PDF) Click here

Ennnum Ezhuthum Term 3 Unit 5 Class 4 and 5  (EM ) Notes of Lesson (PDF) Click here

அரசு பள்ளி அறிவியல் ஆய்வக உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி பள்ளிக்கல்வித்துறை திட்டம் "Special Training Program by the School Education Department for Science Laboratory Assistants in Government Schools"

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகங்கள் முறையாக செயல்படுகின்றனவா? ஆய்வக உபகரணங்கள் தரமானவையாக உள்ளனவா? ஆய்வகங்களால் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், சிறப்பு நடவடிக்கையாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள அறிவியல் பாடம் சார்ந்த ஆய்வக செயல்பாடுகள் குறித்த பயிற்சியை அந்தந்த மாவட்டங்களில் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பயிற்சிக்கான கையேடுகளை கல்வியாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு தயாரிப்பதற்கான பணிமனை, சென்னையில் 3 கட்டங்களாக வருகிற 12-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இந்த பணியில் ஈடுபடும் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மன்றம் பயிற்சி நிறுவன முதல்வர்கள் பணிவிடுப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment