மாணவர்களை 6 வயதில் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 24, 2024

மாணவர்களை 6 வயதில் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

6 வயதில் மாணவர்களை 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
  

தேசிய கல்விக் கொள்கை “தேசிய கல்விக் கொள்கை 2020'' அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், சில மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்நிலையானது அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை (3 முதல் 8 வயது வரை), 2-ம் நிலையானது 3 முதல் 5-ம் வகுப்பு வரை (8 வயது முதல் 11 வரை), 3-ம் நிலையானது 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை (11 முதல் 14 வயது வரை), 4-ம் நிலையானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (14 முதல் 18 வயது வரை) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முதல்நிலையை அடிப்படை என்றும், 2-ம் நிலையை ஆயத்தம் என்றும், 3-வது நிலையை நடுநிலைப்பள்ளி என்றும், 4-வது நிலையை இடைநிலை பள்ளி என்றும் அழைக்கிறார்கள்.

  6 வயதில் 1-ம் வகுப்பு இந்த கல்வி முறையின்படி, மாணவர்களை 6 வயதில் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும். இதனை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த வயது வரம்பு என்பது பள்ளிப்படிப்பை தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் வளர்ச்சிக்கான தயார்நிலையை கருத்தில்கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 வயதில் குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய, முக்கியமான கட்டத்தில் இருப்பார்கள். அந்த வகையில் வயதுக்கு ஏற்ற கற்றல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவும் சிறப்பாக இது இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில்... இதில் ஏற்கனவே உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே 6 வயதில்தான் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுதவிர கர்நாடகா, கோவாவில் 5 வயது 10 மாதங்களில் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 5 வயதில் மாணவர் சேர்க்கை நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment