திட்டமிட்டு செலவுகளை நிர்வகித்தாலும், எதிர்பாரா
"விதமாக வரும் தேவைகளை சமாளிக்க வேறு
வழியில்லாமல் பலரும் கடன் வாங்குகிறார்கள்.
கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவதற்கான சாத்தியக்
கூறுகள் இருக்கிறதா, எந்த அளவிலான கடனை
சமாளிக்க முஷாம் அல்லது தவிர்க்க முடியும் என்பது
பற்றிய ஆலோசனைகள்
இதோ...
தற்போதைய வாழ்க்கைமுறையில் கடன் அட்டை
எனப்படும்: கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் எனும்
பெர்சனல் லோன் மற்றும் மருத்துவ செலவுக்காக
வாங்கும் கடன் இவை மூன்றில்தான் பலரும் சிக்கிக்
கொள்கிறார்கள்.
கிரெடிட் கார்டு கடன்:
கிரெடிட் கார்டு தவணைக்கு ஒவ்வொரு மாதமும்
நீங்கள் செலுத்தும் தொகையைவிட, அதிகமாக
செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அதிக
விலையுள்ள பொருட்களை கிரெடிட் கார்டு மூலம்
வாங்குவது பலரது வழக்கமாகும். அதற்கான தவணை
யாக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையை
மட்டும் செலுத்தினீர்கள் என்றால், விரைவாகவே
உங்களுடைய கிரெடிட் கார்டு கடன்
அதிகமாகும்.
இதைத் தவிர்க்க வேண்டுமெனில்,
உங்கள் கணக்கில் உள்ளதை
விட அதிக பணத்தை செலவு
செய்வதை நிறுத்த வேண்டும்.
உங்களுடைய கிரெடிட் கார்டையும்,
டெபிட் கார்டாக நினைத்தே
எந்தவொரு செலவையும்: செய்
யுங்கள். அப்போதுதான் அதிக
மாக செலவழிக்கும் எண்ணம்
தோன்றாது.
ஷாப்பிங் செல்லும்போது,
ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட்
கார்டுகளை உடன் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.
கிரெடிட் கார்டில் தற்போது உங்களுடைய கடன்
தொகை எவ்வளவு இருக்கிறது என்று முதலில் அறிந்து
கொள்ளுங்கள். அதை குறைக்கும்வரை கிரெடிட்
கார்டு மூலம் எந்தச் செலவும் செய்யாதீர்கள்.
மருத்துவச் செலவுக்கான கடன்:
மருத்துவ சிகிச்சைக்கான தேவைகள் திடீரென்று
எதிர்பாராவிதமாக வரலாம் அல்லது காலப்போக்கில் உருவாகலாம். மருத்துவத்துக்கான செலவுகள் அதி
கரிக்கும்போது, அதற்கான பணத்தை திரட்ட முடி
யாமல் பலரும் திணறுவார்கள். அப்போது வேறுவழி
யில்லாமல் கடன் வாங்கிச் சமாளிக்க வேண்டிய
நிலை உண்டாகும்.
ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில்
இணைவது அவசியமானதாகும். எத்தகைய சிகிச்சை
கள் காப்பீட்டு வரம்பில் அடங்கும் என்பதையும்
தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். காப்பீட்டு
வரம்பில் வராத சிகிச்சைமுறைகளை மேற்கொள்ளும்
போது, அதற்கான நிதித் தேவையை சமாளிக்க
குறைந்தபட்ச வட்டி விகிதம் கொண்ட கடன் திட்டங்
களை அணுகலாம். கிரெடிட் கார்டு அல்லது அதிக
வட்டி விகிதம் கொண்ட கடன் திட்டங்கள் மூலம் நிதி
திரட்டுவது உங்களுக்கு மேலும் சிரமத்தை
உண்டாக்கும்.
தனிநபர் கடன்:
பலரும் கவர்ச்சிகரமான சலுகைகள்
மூலம் ஈர்க்கப்பட்டு அல்லது
ஆடம்பர வாழ்க்கைமுறைக்
கான தேவைகளுக்காகவே தனி
நபர் கடன் பெறுகிறார்கள்.
இதை தவிர்த்து முக்கியமான
தேவைகளுக்கு மட்டும் தனி
நபர் கடன் பெறும் முடிவை
எடுக்கலாம். தனிநபர் கடன்
முன்பாக, அதை
திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை வகுத்துக்
கொள்வது அவசியமானது.
பெறுவதற்கு
தெளிவான பட்ஜெட்டை உருவாக்கி, எந்தச் சூழ்
நிலையிலும் அதை கைவிடாமல் கடைப்பிடிப்பதே
தனிநபர் கடனை தவிர்க்க உதவும் வழியாகும்.
உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் இலக்கு
களுக்கு ஏற்றவகையில் பட்ஜெட்டை தயார் செய்யுங்
கள். அதன் மூலம் தேவையற்ற செலவுகளை கட்டுப்
படுத்த முடியும். இவ்வாறு திட்டமிட்டு செயல்பட்டால்
தனிநபர் கடனை எளிதாக சமாளிக்க முடியும்.
No comments:
Post a Comment