ஆசிரியர் வீட்டுக்கும், பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம்? பள்ளிக்கல்வித் துறை விவரங்களை சேகரிக்கிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, February 23, 2024

ஆசிரியர் வீட்டுக்கும், பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம்? பள்ளிக்கல்வித் துறை விவரங்களை சேகரிக்கிறது

அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் இருந்து பணிக்கு வர வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது. 
ஆனால் இந்த நடைமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றுவதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்த்து, நல்லிணக்கம் பேணுவதற்கான வழிமுறைகளை வகுத்து, அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த ஒருநபர் ஆணையத்தின் பள்ளிக்கல்வித் துறைக்கு சில விவரங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. 

 அதன்படி, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர், அவர்களின் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே 8 கி.மீ. தூரத்துக்குள் வசிப்பவர்கள் யார்?, 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் யார்?, அவர்களின் இருப்பிட முகவரி ஆகியவை அடங்கிய விவரங்களை ஆசிரியர்களிடம் இருந்து கேட்டு பெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

 இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, 'மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் கூட ஒரே சாதிய ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடக்கிறது. சில பள்ளியில் ஒரே சாதியை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என குழுவாக செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. இதனை களைய இந்த விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கலாம்' என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment