1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் முடிக்க திட்டம் பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 19 مارس 2024

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் முடிக்க திட்டம் பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் 

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 22-ந் தேதியுடனும், பிளஸ்-1 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 


முன்கூட்டியே தேர்வு 

 நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட இருக்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி இந்த இடைப்பட்ட காலத்துக்குள் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வை தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி ஏப்ரல் 13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிப்பதற்கான ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق