பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வில், நேற்று இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினார்கள்.
இதில் இயற்பியல் பாடத்துக்கான தேர்வை எழுதி முடித்து வந்த மாணவ-மாணவிகள், வினாத்தாள் சற்று எளிதாகவே கேட்கப்பட்டு இருந்ததாகவும், மீண்டும், மீண்டும் கேட்கப்பட்ட வினாக்களும், எதிர்பார்த்த வினாக்களும் அதிகளவில் இடம்பெற்று இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இயற்பியல் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் மாணவ-மாணவிகள் எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்களும் கூறினர்.
இதேபோல் பொருளியல் பாடத்தேர்வு வினாத்தாளும் சற்று எளிதாக இருந்ததாகவே மாணவ-மாணவிகள் தரப்பில் சொல்லப்பட்டது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment