பிளஸ்-2 ஆங்கிலப் பாடத் தேர்வில் வினாக்கள் சற்று கடினம்! மாணவ-மாணவிகள் கருத்து! - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 6 مارس 2024

பிளஸ்-2 ஆங்கிலப் பாடத் தேர்வில் வினாக்கள் சற்று கடினம்! மாணவ-மாணவிகள் கருத்து!

பிளஸ்-2 ஆங்கிலப் பாடத் தேர்வில் வினாக்கள் சற்று கடினம்! மாணவ-மாணவிகள் கருத்து!
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழ் பாடத் தேர்வுக்கான வினாக்கள் எளிதாக இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளித் தேர்வர்களாக 7 லட்சத்து 72 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளும், 8 ஆயிரத்து 191 தனித்தேர்வர்களும் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 696 பேர் தேர்வு எழுத வரவில்லை. மற்ற மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. 

தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகளின் முகம் சற்று வாடிப் போய் இருந்தது. ஆங்கிலப் பாடத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டு இருந்ததாகவும், அதிலும் 1, 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரையில் எதிர்பார்த்த வினாக்களும், ஏற்கனவே கேட்கப்பட்ட (ரிபீட்டு கொஸ்டின்) வினாக்களும் இடம்பெறாமல் இருந்ததாகவும் மாணவ-மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர். மேலும் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 மாணவர்கள் பிடிபட்டனர் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

 இதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق