இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான
போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
20-ந்தேதி கடைசி நாள்
2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தனர்.அதனை ஏற்று, ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி மாலை 5 மணி வரை வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், விண்ணப்பதாரர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய முடியாது எனவும், இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق