ஆய்வக உதவியாளர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டு முதல் செய்முறை பாடவேளை கால அட்டவணை தயாரித்து வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி
உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு
2024 - 2025ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 வகுப்பு வரை பயின்று வரும் மாணவ /
மாணவியர்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை பாடவேளை மற்றும் மேல்நிலை வகுப்பு
மாணவ
மாணவியர்களுக்கு ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு
பாடவேளைகளுக்கான கால அட்டவணை தலைமையாசிரியரால் தயார் செய்து
வழங்கப்படவேண்டும்.
பார்வை 1ல் காணும் அரசு கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்
அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம்
வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும்
பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல், செய்து கற்றலின்
மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல். அறிவியல் மனப்பான்மையை
வளர்த்துக் கொள்ளுதல், மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை மூலம்
பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின்
செல்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment