2024-25-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு எப்போது? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 28, 2024

2024-25-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு எப்போது?

பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். 


தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 6-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அந்த அறிவிப்பின்படி தேர்வு முடிவை வெளியிட அரசுத்தேர்வுத்துறை திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோரும், மாணவர்களும் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி வரும் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பப் பதிவு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர். இதன்படி பார்க்கையில் மே 2-வது வாரத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கும் என்றே சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment