பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு: கணித தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தன மாணவ-மாணவிகள் கருத்து - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 20, 2024

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு: கணித தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தன மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு: கணித தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தன மாணவ-மாணவிகள் கருத்து 
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவ-மாணவிகள் தயாராகும் வகையில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. 

இந்த தேர்வை ஏராளமான மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத் தேர்வில் வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டு இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அதிலும் கணிதம் தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் எளிதில் தீர்வு காணும் வகையில் இடம்பெற்று இருந்ததாக கூறினர். 

மேலும் கணிதம் மற்றும் வணிகவியலில் எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டு இருந்ததால், 100-க்கும் 100 மதிப்பெண்ணை மாணவ-மாணவிகள் அதிகம் பேர் எடுக்க வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment