தமிழ்நாடு கல்லூரிக் கல்வியின் கீழ் வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிக்கை வெளியீடுஅந்தவகையில் தமிழ் துறையில் 569 இடங்கள், ஆங்கிலத் துறையில் 656 இடங்கள், கணிதம் துறையில் 318 இடங்கள், வணிகவியல் துறையில் 296 இடங்கள், வேதியியல் துறையில் 263 இடங்கள் என 65 துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 921 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 3 ஆயிரத்து 921 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு ஆன்லைன் வாயிலான விண்ணப்பப்பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
விண்ணப்பதாரர்கள் https://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கல்வி, வயது தகுதி என்ன?
தேர்வுத் திட்டம் என்ன? கட்டண விவரங்கள் என்ன?
என்பது உள்பட பல்வேறு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் தேர்வர்களுக்கு தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி நடத்த உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment