தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்iசட்டத்தின் படி அனைத்து சிறுபான்மையற்றi தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்புi மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையானது தமிழகத்தில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட 65 ஆயிரத்து 946 குழந்தைகள் மற்றும் தொடர்ந்துi பயின்று வரும் குழந்தைகள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 122 சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களின் விவரங்கள் மாவட்டங்களில் உள்ள குழுவால் சரிபார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகை ரூ.383.59 கோடியை வழங்க அரசால் அரசாணை பள்ளி கல்வித்துறையால் கடந்த 1-ந் தேதி வழங்கப்பட்டு உள்ளது.
அந்த தொகையைi விரைவாக பள்ளிகளுக்கு வழங்குவதற்கு தேவையானi நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2023-24-ம் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 406 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதி உள்ள 70 ஆயிரத்து 553 குழந்தைகள் சேர்க்கப்பட்டு பயின்றுi வருகின்றனர். 2024-25-ம் நிதிi ஆண்டில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பின்னர் இதற்கான கல்வி கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment