சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. கட்டாய தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதில் விலக்கு அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 13, 2024

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. கட்டாய தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதில் விலக்கு அரசாணை வெளியீடு

தமிழ் மொழி சிறுபான்மை பேரவையினர், மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் மொழி பாட ஆசிரியர்கள் நிரப்பப்படாததால், இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. கட்டாய தமிழ் பாடத்துக்கு பதிலாக தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்டு இருந்தனர். 
மேலும் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், தமிழ் மொழி பாடத் தேர்வில் இருந்து விலக்கு கோரி முறையீடு செய்யப்படமாட்டாது என உறுதி அளித்தும் இருந்தனர். 

தமிழ் மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கை, உறுதிமொழியை ஏற்று, நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாக கொண்ட மாணவர்களுக்கு மட்டும் கட்டாய தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, சிறுபான்மை தாய்மொழி பாடத்தினை தேர்வாக எழுத அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது. 

மேலும் 2024-25-ம் கல்வியாண்டில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழ் ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment